பெரம்பலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்ததது.கோடைவெயிலால் வெப்ப மிகுந்த பகுதியாக காணப்பட்ட பெரம்பலூர் மாவட்டம் தற்போது மழையால் குளிர்ச்சியடைய தொடங்கியுள்ளது
தற்போது பெய்து வரும் கோடை மழையால் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.இந்நிலையில் பெரம்பலூர் துறையூர் சாலையில் அமைந்துள்ள ஐயப்பன் திருக்கோவிலின் பின்புறம் பழைமை வாய்ந்த தெப்பகுளம் அமைந்துள்ளது.
இந்த தெப்பக்குளமானது சுமார் 7 வருடங்களுக்கு முன்பு நடைபாதைகள் மற்றும் சுற்றுச்சுவர் அமைத்து பொதுமக்கள் நடைபயிற்சி செல்வதற்காகவும் விழா காலங்களில் பொதுமக்கள் வந்து செல்ல பயன்பாட்டிற்காகவும் செயல்பட்டு வருகிறது
இந்த நிலையில் நேற்றிரவு பெய்த கனமழையால் தெப்பக்குளத்தின் நடைபாதையில் மழைநீர் ஆங்கேங்க தேங்கி நின்றதால் தெப்பக்குளத்தின் மண் ஈரப்பதத்தால் குளத்தின் ஒரு பகுதியில் நடைபாதை மற்றும் அதற்காக அமைக்கப்பட்டிருந்த சுவருடன் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தினசரி காலை அப்பகுதியில் பலர் நடைபயிற்சி மேற்கொள்வதால் யாரும் அப்பகுதியில் செல்லமால் இருக்க பெரம்பலூர் நகராட்சி சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
மண் ஈரப்பதத்துடன் இருப்பதால் மீண்டும் மழைபெய்தால் குளத்தின் வேறேதேனும் பகுதியில் சரிந்து விழாலாம் என்று கூறப்படும் நிலையில் பொதுமக்கள் யாரும் அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டாம் என்று பெரம்பலூர் நகராட்சி சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது