எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

கர்நாடக அரசின் மேகதாட்டு அணைக்கு ஆதரவாக காவேரி மேலாண்மை ஆணையம் சட்டவிரோதமாக உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நிறைவேற்றிய தீர்மானத்தை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சை மண்டல பொறுப்பாளர் சீனிவாசன் தலைமையில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் வைத்தியநாதன், மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் மற்றும் திரளான விவசாயிகள் கோட்டாட்சியர் அலுவலகம் நோக்கி சிறிது தூரம் பேரணியாக வந்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர். அப்போது சட்ட நகலை விவசாயிகள் எரிக்க முயன்றனர்.
அப்பொது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார் போலீசார் விவசாயிகளைத் தடுக்க முயற்சித்தனர். அதனை மீறி விவசாயிகள் நகலை எரிக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது அதன் பின்னர் போலீசார் நகலை பிடுங்கி அணைத்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.