போடிநாயக்கனூர் அருகே உள்ள மேலச் சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட போடி ரெங்கநாதபுரம் 07 வது வார்டில் உள்ள ஸ்ரீ திருப்பதி நகர் குடியிருப்பு பகுதியில் ரோட்டை மறித்து தினசரி குப்பைகளை போடும் இடமாக மாற்றி உள்ள அவலம்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள மேல சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட போடி ரங்கநாதபுரம் 7 ஆவது வார்டில் உள்ள மெயின் தெருவில் அந்தப் பகுதிகளில் சேகரமாகும் இறந்தவர்கள் பயன்படுத்திய துணிமணிகள், மெத்தைகள் தலையணை மற்றும் பியூஸ் போன உடைந்த பல்புகள், வீட்டு விசேஷங்களுக்கு பயன் படுத்திய வாழைமரம் சாப்பிட்ட வாழை இலைகள் பிளாஸ்டிக் டம்ளர் போன்ற கழிவு பொருட்களையும் டெய்லர் கடைகளில் வெட்டிய பின் மீதமான துணிகள் ஆகியவற்றை தினசரி மலை போல குப்பைகளை கொட்டி வருகிறார்கள்.
இந்த குப்பைகளை அகற்றக்கோரி பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திற்கு அந்த பகுதி மக்கள் மனு கொடுத்தும் பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மேற்படி குப்பைகளை அள்ளி அப்புறப்படுத்தாமல் அப்படியே தீ வைத்து விடுகிறார்கள்.
குப்பைகளை தீ வைக்காமல் அதனை பேரூராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த வேண்டும் குப்பைகளை தீ வைப்பதால் ஏற்படும் புகை காரணமாக அந்த பகுதியில் உள்ள வசிக்கும் குடியிருப்பு பகுதி பொதுமக்களுக்கு பயங்கர ஆஸ்துமா மூச்சுத் திணறல் கண் எரிச்சல் போன்ற கொடுமைக்கு அனுதினமும் ஆளாகி நிம்மதி இழந்து வாழ்கிறார்கள்.
இது சம்பந்தமாக பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளுக்கு தீ வைக்காமல் குப்பைகளை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சார்பாக பேரூராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் .