பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பொதுமக்களுக்கு நவீன கண் சிகிச்சை உபகரணங்கள் தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் இணை இயக்குனர் ரமேஷ் பாபு தலைமையில் கண்காணிப்பாளர் கே எஸ் குமார் ஆகியோர் உதவியுடன் ஏங்கி வரும் கண் மருத்துவ சிகிச்சை பிரிவில் கிராமப்புற ஏழை எளிய மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் முறையான கண் சிகிச்சை பெறும் வகையில் நவீன கண் சிகிச்சை உபகரணங்கள் மற்றும் கண் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சரயு வெங்கட லட்சுமி மருத்துவர் நிவேதிதா மற்றும் செவிலியர்கள் ஆகியோர் மூலம் கண் சிகிச்சை சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது
இதனை பெரியகுளம் மற்றும் இதனை சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் பயன்படுத்தி பலன் அடையுமாறு அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குனர் ரமேஷ்பாபு கூறியுள்ளார்
இது குறித்து அவர் மேலும் கூறும்போது மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பல நோயாளிகளும் பார்வை இழந்த எங்களது வாழ்வினில் கண் ஒளி கிடைக்குமா என ஏங்கிய ஏழை எளிய பொது மக்களுக்கு கண் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் சேவை தொடரும் இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்