காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் விழா திமுகவினரால் கொண்டாடப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் சாந்தி சதிஷ் குமார் தலைமையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருஉருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது
அதனைத் தொடர்ந்து 1000 மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர் கோபால், பேரூராட்சி துணை தலைவர் இந்திராணி சுப்பிரமணி திமுக நிர்வாகிகள் பொடவூர் ரவி, பண்ருட்டி தணிகாசலம் போஸ்கோ, உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்