தாராபுரம் செய்தியாளர் பிரபு
தாராபுரத்தில் மறைந்த முன்னால் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு நகர நகர செயலாளர் தலைமையில் பேரணி.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு தாராபுரம் திமுக நகர செயலாளர் பொறியாளர் முருகானந்தம் தலையில் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்ட திமுக கட்சியினர் தாராபுரம் காமராஜபுரத்திலிருந்து சின்னக் கடைவீதி பெரிய கடை வீதி பூக்கடை மூக்கு சந்திப்பு வழியாக மாபெரும் பேரணியாக அண்ணா சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள திமுக கட்சியின் கொடிக்கம்பத்தை திருப்பூர் நான்காவது மண்டல தலைவர் இல. பத்மநாபன் முன்னிலையில் கொடி கம்பத்தை ஏற்றி வைத்து பின்னர் அருகில் இருந்த மாபெரும் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்
இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் அணி செயலாளர் செல்வராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி ராஜேந்திரன், தாராபுரம் நகர்மன்ற தலைவர் பாபு கண்ணன் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் திமுக நகர கவுன்சிலர்கள் பல திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்..
தாராபுரம் செய்தியாளர் பிரபு