தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி தற்போது வரை சுமார் 2.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.
இந்த நிலையில் தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி மற்றும் திமுக நிர்வாகிகள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.