நாட்டில் மதவாத சக்திகளை சூரசம்காரம் செய்வோம் என சூளுரைத்து, பிரச்சாரத்தை ஆரம்பித்த இடத்திலேயே முடித்து வைத்த பொறுப்பு அமைச்சர் டி. ஆர். பி. ராஜா !!
கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரை வீழ்த்தி, திமுக வேட்பாளர் முனைவர் கணபதி பா ராஜ்குமார் 1 லட்சத்து 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
தேர்தல் வெற்றிக்கு முன்னதாக மருதமலை முருகன் கோயிலில் பிரச்சாரத்தை ஆரம்பித்தார். தலைமை கழகத்தால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளராக தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் பி ஆர் பி ராஜா நியமிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையிலே பிரச்சாரத்துக்கு முன்னதாக மருதமலை முருகன் கோயிலில் டிஆர்பி ராஜா கணபதி ராஜ்குமார் உள்ளிட்டோர் வழிபட்டு, மருதமலை பழங்குடி மக்கள் கிராமத்தில் இருந்து பிரச்சாரத்தை ஆரம்பித்தனர்.
வெற்றிவேல் வீரவேல் என்ற விளக்கத்தை முழங்கிய டிஆர்பி ராஜா இந்த தேர்தலில் மதவாத சக்திகளை நாட்டு மக்கள் சூரசம்ஹாரம் செய்ய வேண்டும் செய்வோம் என சூளுரைத்திருந்தார். மதவாதம் மற்றும் மிளகு வாதத்தை அடிப்படையாக வைத்து பாஜக அரசியல் செய்வதாக பொதுவிமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரமும் சூடு பிடித்தது.
இந்த நிலையிலே பாஜக, அதிமுக தனது கோட்டையாக நினைத்து வெற்றி வாகை சூட கங்கணம் கட்டி வேலை பார்த்து நிலையில், அவர்களின் கனவை கலைத்தது திமுக திட்டமிடல். முனைவர் கணபதி ப. ராஜ்குமார் , தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது ஆரம்பம் முதல் முன்னிலை வகுத்து, வெற்றி அடைந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானார்.
இந்த நிலையிலே பிரச்சாரத்தை ஆரம்பித்த இடத்திலேயே வெற்றி பெற்ற பின்னர் தேர்தல் நகர்வை முடித்து இருக்கின்றனர்.
மருதமலை முருகன் கோயிலுக்கு கோயம்புத்தூர் காலை நாடாளுமன்ற தொகுதிக்கான பொறுப்பு அமைச்சர் டிஆர்பி ராஜா, நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வான கணபதி ராஜ்குமார் மற்றும் திமுகவினர் வழிபாடு செய்தனர். வெற்றிவேல் வீரவேல் என முழங்கி, பாஜகவை சூர சம்ஹாரம் செய்வதாக சூளுரை செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட இடத்தில், வெற்றி சான்றிதலுடன் வழிபாடு செய்தது குறிப்பிடத்தக்கது.
இவர்களுடன் கோயம்புத்தூர் மாநகர் மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா கார்த்திக், திமுக மாநில தகவல் தொடர்பு பிரிவு மாநில இணை செயலாளர் பொள்ளாச்சி டாக்டர் மகேந்திரன், வ.மா . சண்முகசுந்தரம், மருதமலை முருகன் கோயில் அறங்காவலர்கள் கணகராஜ், சுகன்யா ராஜ ரத்தினம் , பிரேம் மற்றும் திமுகவினர் ஏராளமான பங்கேற்றனர்.