தேனியில் தயானந்த புரி சுவாமிகளுடன் தேசிய செட்டியார் பேரவை நிறுவனத் தலைவர் பி எல் ஏ. ஜெகநாத் மிஸ்ரா சந்திப்பு மாவட்ட தலைநகரான தேனியில் ஸ்ரீ தயானந்தபுரி சுவாமிகளை தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவர் பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா மரியாதை நிமித்தமாக அவரது ஆசிரமத்தில் சந்தித்து ஆசி பெற்றார்
அப்போது அவர்கள் இருவரும் விரைவில் நடைபெற உள்ள 24 மனை தெலுங்கு செட்டியார்கள் மாநில மாநாடு மற்றும் சமுதாய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்
மேலும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் செட்டியார் இன மக்களுக்கு முன்னுரிமை அடிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதனை நடைபெறவுள்ள மாநாட்டில் முக்கிய தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் உள்பட செட்டியார்கள் பேரவை வளர்ச்சிக்கு பல்வேறு கோரிக்கைகள் முக்கிய தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்றும் ஆலோசித்தார்கள்
இந்த சந்திப்பின்போது பேரவையின் தேனி மாவட்ட தலைவரும் செட்டியார் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவருமான சுந்தரவடிவேல் மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் மற்றும் இளைஞர் அணி மாவட்ட நிர்வாகிகள் கண்ணன் பாலாஜி மற்றும் செட்டியார்கள் பேரவை நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்
தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவர் பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை கனிவுடன் உபசரித்தார்