மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் பல்நோக்கு அரங்கத்தில் விருதுநகர் மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்களின் ஓவியக் கண்காட்சி தொடங்கியது.
விருதுநகர் மாவட்டத்தில் கோடை விடுமுறையையொட்டி, பள்ளிக் கல்வித்துறை, மாவட்ட நிர்வா கம் இணைந்து நடத்திய நுண்கலை பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் வரைந்த சிறந்த ஓவியங் களைக் கொண்டு, மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆகியோர் இந்தக் கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்ட னர். விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வளர்மதி, பயிற்சி ஆசிரியர்கள், அரசுத் துறை அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
300-க்கும் அதிகமான வண்ணத்தால் வரையப்பட்ட ஓவியங்கள், துணி ஓவியங்கள், கோட்டோவியங்கள் எனப் பல்வேறு வகையான ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப் பட்டுள் ளன. இந்தக் கண்காட்சி வருகிற 15 ம் தேதி வரை நடைபெறுகிறது.