தேனி மாவட்டம் வீர பாண்டியில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் தூய்மை பணி மற்றும் மரக்கன்று நடுதல்.
தேனி அருகே உள்ள வீரபாண்டி. இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, தமிழ்நாடு தேனி மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5 இன்று வீரபாண்டி முல்லைப் பெரியாற்று ஆற்றங்கரையில் தூய்மைப்படுத்துதல் மற்றும் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடைபெற்றது.
நிகழ்வை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி என். ஆர் .டி. ஆர் தியாகராஜன் வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் க. சண்முகம் பேரூராட்சி மன்ற தலைவர் எஸ்.கீதாசசி ஆகியோர் தூய்மை பணியை துவக்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் . டி.பி.விஸ்வநாதன் பசுமையை போற்றும் வகையில் மரம் நடும் பணியை துவக்கி வைத்தார்.
சுற்றுச்சூழல் தினத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் க.சுருளிவேல் ஆலோசனைப்படி சுருளிப்பட்டி ரா.அன்பு ராஜா ஒழுங்கீனத்தில் வீரபாண்டி ஆற்றங்கரையில் பொதுமக்கள் வீசிச் சென்ற பழைய துணி நெகிழிப்பை நெகிழி குடுவை கள் மற்றும் மாசற்ற துணிகள் ஆகியவற்றை முல்லை ஆற்றில் இருந்து அகற்றி சுத்தப்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தன்னார்வலர்களும், மலை ஆர்மி கோச்சிங் சென்டர் மாணவர்களும் முன் நின்று களப்பணியில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் சித்ராதேவி, சுற்றுலாத்துறை அலுவலர் பாஸ்கரன், முகமது பாஷா, முகமது இப்ராஹிம், ஆசிரியர் பாண்டி சிதம்பரம், சிறுமலர், காமராஜ், சுந்தர், குபேந்திரன், கொடியரசன் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.