குற்றாலத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின் படி நேற்று தமிழ்நாடு அரசு வனத்துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தேசிய பசுமைப் படை மற்றும் தென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் IAS அகடமி இணைந்து உலக சுற்றுச் சூழல் விழாவினை நடத்தியது.
இவ் விழாவிற்கு தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் முனைவர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார் ஹட் நிறுவனர் முனைவர் ரெங்கநாதன், முதல்வரின் பசுமை பாதுகாவலர் திட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ண பவானி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இலஞ்சி ஆர்.பி. பள்ளி ஆசிரியரும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளருமான சுரேஷ் குமார் வரவேற்றார் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் மதியழகன் காட்டைக் காப்போம் என்ற விழிப்புணர்வு பாடல் பாடினார்.
தென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் நிர்வாக இயக்குநர் மாரியப்பன் தலைமையில் சுற்று சூழல் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனர்.
சிறப்பு விருந்தினராக கடையநல்லூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் கலந்து கொண்டு விழிப்புணர்வுப் பேரணியை சிறுவர் பூங்காவில் இருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பேரணியில் சுமார் 200 அகாஷ் அகடமி மாணவர்கள் கலந்து கொண்டு நிலம், நீர், காற்று, & சூழல் வளம் பாதுகாக்க வேண்டியும்
பாலிதீன் பயன்பாட்டை தவிர்க்கவும், துணிப்பை பயன்படுத்த வேண்டியும் மரங்களை நட்டு பாதுகாக்கவும் வேண்டி கோசமிட்ட வாறு முக்கிய வீதி வழியாக சிற்றருவி சென்று வனத்துறை வளாகத்தில் நிறைவடைந்தது.
பின்னர் நடைபெற்ற கருத்தரங்கில் ஆழ்வார் குறிச்சி பரமகல்யாணி சுற்றுச்சூழல் உயர் ஆய்வு மைய உதவி பேராசிரியர் முனைவர் சாந்தினி புவியைக் காப்போம் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்.
வனவளம் காக்க பொதுமக்கள் செய்ய வேண்டியவை குறித்தும் வனப்பாதுகாப்பு சட்டங்கள் குறித்தும் குற்றாலம் பிரிவு வனவர் பிரகாஷ் எடுத்துரைத்தார்.
நிகழ்வில் குற்றாலம் காவல் உதவி ஆய்வாளர் மகேந்திரன்,செங்கோட்டை பிரிவு வனவர் முருகேசன் உள்ளிட்ட வனப்பணியாளர்களும் ஆகாஷ் அகடமி ஆசிரியர்கள் சித்தாய், சிவா, குமாரவேல் , ஓவிய ஆசிரியர் ஜெயராமன்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மீரான் மருத்துவமனை சார்பில் பங்குபெற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்று வழங்கப்பட்டது.
ஆசிரியர் கணேசன் நன்றி கூறினார். குற்றாலம் வனச்சரக அலுவலர் சீத்தாராமன் அனைத்து ஏற்பாடுகளும் செய்திருந்தார்.