திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள சின்னகரம் திரெளபதியம்மன் ஆலயத்தில் கடந்த மே 31ஆம் தேதி இரவு அர்ஜுனன் தபசு நிகழ்ச்சியும், மறுநாள் ஜூன் 1-ம் தேதி இரவு சக்கரவாணி கோட்டை பிடிப்பது நிகழ்ச்சியும், 2-ம் தேதி இரவு திருவலஞ்சுழி சக்கரவர்த்தி குழுவினரின் அறவான் களபலி நாடகம் நடைபெற்றது.

கடந்த 3-ம் தேதி காலை 9:00 மணிக்கு சக்தி கிரகம் எடுத்தல் நிகழ்ச்சியும், தீ போடுதல் நிகழ்ச்சியும், 11 மணி அளவில் காவடி எடுத்தல் நிகழ்ச்சியும், பகல் 12 மணியளவில் கூந்தல் முடிதல் நிகழ்ச்சியும் நடைபெற்று, மாலை 6 மணி அளவில் தீமிதி திருவிழாவும் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்தனர். ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.இரவு 9-மணிக்கு வலங்கை ரெயின்போ சேகர் வழங்கும் பாரத் மெலோடிஸ் ஆர்கெஸ்ட்ரா-வின் திரைப்பட தெம்மாங்கு இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை ஆலய தக்கார் ஆ. ரமேஷ், ஆய்வாளர் க. மும்மூர்த்தி மற்றும் சின்னகரம் கிராமவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *