திண்டுக்கல் மாவட்டம் பழனி வ.உ.சி மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்க்க பேரமைப்பின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் வணிகர் சங்க மாநில தலைவர் விக்கமராஜா பிறந்த நாளை முன்னிட்டு பழனி மாவட்ட தலைவர் ஜே.பி. சரவணன் தலைமையில் கேக் வெட்டி பிறந்தநாள் விழா நிகழ்ச்சி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டன..
தொடர்ந்து சங்க கொடி வடிவில் கேக் தயார் செய்யப்பட்டு மாவட்ட தலைவர் கேக் வெட்டி நிர்வாகிகளுக்கு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிகழ்வில் மாநில இணைச் செயலாளர் கந்தவிலாஸ் பாஸ்கரன் மாவட்ட கௌரவத் தலைவர் கன்னுச்சாமி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜெகதீஷ் மாவட்டத் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் செல்வம் ஸ்டோர் சம்பத், ஜெபக்கனி ராஜா,ரம்யா கிருஷ்ணன், ஈஸ்வரமூர்த்தி, வழக்கறிஞர் மணிக்கண்ணன், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வணிகர் சங்க மாநிலத் தலைவர் விக்கமராஜா பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.