வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
வடமதுரை அருகே குடுகுடுப்புக்காரரைப் போல் வந்து செயின் பறித்த வாலிபர் கைது, 3 பவுன் தங்க நகை, இருசக்கரவாகனம் பறிமுதல்.
திண்டுக்கல், வடமதுரையை அடுத்த வேல்வார்கோட்டை, செட்டியபட்டி பகுதியை சேர்ந்த துரைச்சாமி மனைவி வள்ளியம்மாள் என்பவரிடம் கடந்த மாதம் 27-ம் தேதி குடுகுடுப்புக்காரர் போல் வந்து 3 பவுன் தங்க செயினை பறித்து சென்றது தொடர்பாக வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதுகுறித்து வேடசந்தூர் டிஎஸ்பி. துர்காதேவி உத்தரவின் பேரில் வடமதுரை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சார்பு ஆய்வாளர் சித்திக் மற்றும் டிஎஸ்பி தனிப்படையினர்
ஆகியோர் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட தங்கம்(24) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 3 பவுன் தங்க நகை, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.