எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்!
ஈரோடு தெற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் செயற்குழு கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட தலைவர் மு.ஜமாலுதீன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் குறிஞ்சி.பாஷா முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் ம.பர்ஹான் அகமது வரவேற்புரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக கோவை மண்டல செயளாலர் ப.முகமது லுக்மானுல் ஹக்கீம் கலந்து கொண்டு உரையாற்றினார்.
கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி மற்றும் பணியில் சம்பந்தமாக விவாதிக்கப்பட்டு கீழ்கட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஈரோடு தெற்கு மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளராக அ.சாகுல் ஹமீது அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். அவர்களின் பணிகள் சிறக்க மாவட்ட செயற்குழு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
வருகிற ஜூன் மாதம் 21 ஆம் தேதி கட்சியின் 16ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்டம் முழுவதும் கொடியேற்று நிகழ்ச்சி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
தொகுதி வாரியாக அரசியல் பயிலரங்கம் நிகழ்ச்சி நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் அ.சாகுல் ஹமீது, SDTU தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஆட்டோ S.அப்துல் ரகுமான், ஈரோடு கிழக்கு தொகுதி தலைவர் கேபிள் M.சபீர் அஹமது, செயளாலர் தளபதி K.பசீர், மேற்கு தொகுதி செயளாலர் K.மஸ்தான், பவானி தொகுதி தலைவர் H.முகமது ஜாபிர், செயளாலர் S.தர்வேஸ் மைதீன், விமன் இந்தியா மூவ்மெண்ட் (WIM) மாவட்ட தலைவர் மு.சபீனா, வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் மு.பக்ருதீன், பொறியாளர் அணி மாவட்ட தலைவர் ஷஃபான் ஆகியோர் கலந்துகொண்டனர். இறுதியாக மாவட்ட செயலாளர் க.முனாப் நன்றியுரையாற்றினார்.