ரீ பஞ்சமுக வாராஹி தேவி,
தசபூஜ பைரவர் திருக்கோவிலில் பூமி பூஜை மற்றும் திருப்பணிகள் நடைபெறுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் இடைத்தெரு அமைந்துள்ள
ஸ்ரீ பஞ்சமுக வாராஹி தேவி,தசபூஜ பைரவர் திருக்கோவிலில் பூமி பூஜை நடைபெற்றது.
இந்த கோயில் புதிய வடிவில்
ஸ்ரீ பஞ்சமுக வாராஹி தேவி,தசபூஜ பைரவர் திருக்கோவிலில் தனித்தனியே சன்னதிகளுடன் கட்டுவதற்கான பூமி பூஜை விழா அதிகாலையில் சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினா், பொதுமக்கள் செய்திருந்தனா்.
பூஜை விழா நிறைவு பெற்றவுடன் வாராகி உபாசகா் கண்ணப்பன் கு௫ஜி பேசியதாவது: திருவிடைமருதூர் ஸ்ரீ பஞ்சமுக வாராகி தேவி
திருக்கோயில் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது .
பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களால் முடிந்த உதவி செய்து வாராகி அம்மன் அருளைப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன் என கூறினார்.அருகில் ஸ்தாபகர்
நிர்வாகி ஹரிஹரன் உடன் இருந்தார்.