திருநெல்வேலி மாவட்டம்,
பத்தமடை ஹீரா பப்ளிக் ஸ்கூல் திறப்பு விழா.பத்தமடை சிவானந்த ஹாஸ்பிடல் ரோட்டில் மிகச்சிறப்பாக நடைபெற்றது‌. இதில் சிறப்பு விருந்தினர் நெல்லை கே.எம்.ஏ.நிஜாம் பள்ளிக்கூடத்தை திறந்து வைத்து பேசினார்.

பத்தமடை ஹீரா பப்ளிக் பள்ளியின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் பத்தமடை ஹீரா பப்ளிக் பள்ளியின் முதல்வர் ஜெய்லானி மற்றும் அல்மாஸ் ஜின்னா ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

திருநெல்வேலி மாவட்ட மதிமுக செயலாளர் நெல்லை கே.எம்.ஏ.நிஜாம் பள்ளிகூடத்தை திறந்து வைத்தார். தமுமுக மனிதநேய மக்கள் கட்சி நெல்லை மாவட்ட தலைவரும்‌ திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான கே.எஸ்.ரசூல்மைதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் எல்.கே.எஸ்.மீரான் மைதீன், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாநில செயலாளர் பாளை ரபீக், எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் பீர் மஸ்தான், சுவாமி சிவானந்த ஹாஸ்பிடல் நிர்வாகி எம்.சி. ஷர்மா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் வீரை நவாஸ் தமுமுக மாவட்ட துணை செயலாளர் சேக்முகைதீன், பத்தமடை ஜமாஅத் தலைவர் செய்யது மீரான், முன்னாள் தலைவர் மலுக்காமலி, திமுக நகர செயலாளர் சிந்தா மதார், பத்தமடை பேரூராட்சி தலைவர் ஆபிதா ஜமால் மற்றும் துணை தலைவர், பள்ளிவாசல் இமாம் மற்றும் ஆலிம்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.

இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் பத்தமடை ஹீரா பப்ளிக் பள்ளியின் முதல்வர் ஜெய்லானி அனைவருக்கும் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *