கோவை கிரீன் கார்டன் ஹவுசிங் யூனிட் நண்பர்கள் குழு சார்பாக நடைபெற்ற கண் மற்றும் பல்,காது தொடர்பான இலவச மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்..
கோவை கிரீன் கார்டன் ஹவுசிங் யூனிட் நண்பர்கள் குழு சார்பாக பல்வேறு சமூக நலப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக வாசன் கண் மருத்துவமனை மற்றும் Y.M.T.A. பல் HEARZAP காது மருத்துவமனை ஆகியோருடன் இணைந்து கண்,பல் மற்றும் காது தொடர்பான மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது..
உக்கடம் வின்சென்ட் ரோடு பகுதியில் நடைபெற்ற இதில் வாசன் கண்
பொது மேலாளர் வெங்கடேஷ், ஜீவன் மார்க்கெட்டிங் மேலாளர் மகேஸ்வரன்,பல் மருத்துவமனை டாக்டர் அல்தாப். காது மருத்துவமனை டாக்டர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு இலவச மருத்துவ பரிசோதனை முகாமை துவங்கி வைத்தனர்.. இதில் கோவை கிரீன் கார்டன் ஹவுசிங் யூனிட் நண்பர்கள் குழு நிர்வாகிகள்கலீல். முஸ்தபா இப்ராஹிம் ஹாரிஸ் அசார் முபாரக் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்…