என் ஹச் ஐ.எஸ் முறைகேட்டினை கண்டித்துமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்;-
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு
தென்காசி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தென்காசி மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் வைத்து மாவட்ட தலைவர் சுதர்சன் தலைமையில் நடைப்பெற்றது
மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார் மாவட்ட செயலாளர் மாரிமுத்து வரவேற்று பேசியதுடன் ,மாநில செயற்குழு முடிவுகள் குறித்து விளக்கிக் கூறினார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் தென்காசி ராஜ்குமார் நன்றி கூறினார் கூட்டத்தில்
கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது
பணியில் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்மற்றும் ஓய்வூதியர்கள் நோய்வாய்ப்படும் போது கட்டணமில்லா சிகிச்சை பெறும் வகையில் மாத ஊதியத்திலும்,ஓய்வூதியர்களின் ஓய்வூதியத்திலும் மாதந்தோறும்ரூ 300/வீதம் காப்பீட்டு தொகை பிடித்தம் செய்யப்படுகிறது.
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திடம்ஒப்பந்தம் செய்யப்பட்டு கட்டணமில்லா சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது
நோய்வாய்ப்பட்ட ,ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கட்டணமில்லா சிகிச்சை பெற வேண்டி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு செல்லும்போது உரிய காப்பீட்டு தொகை கிடைப்பதில்லை.
பல்வேறு மருத்துவமனைகள் முறையாக காப்பீட்டுத் தொகையை பெற்று தருவதில்லை.
இத்தகைய முறைகேட்டில் ஈடுபடும் மருத்துவமனையின் மீதும்,காப்பீட்டு நிறுவனத்தின் மீதும் பல்வேறு இயக்க நடவடிக்கைகள் எடுத்தும் எந்த தீர்வும் எட்டப்படாத நிலையை கண்டித்தும்,
ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்களுக்குஊதியம் பெற்று வழங்கும் ஐ எப் ஹெச்.ஆர் எம் எஸ் இணைய தள முறையில் மாதந்தோறும் வருமான வரிபிடித்தம் செய்யும் முறையில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை சரி செய்யாத கருவூல நிர்வாகத்தை கண்டித்தும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மைய முடிவின்படி வருகின்ற 13.6.2024 அன்று பிற்பகல் 5 மணி மாநிலம் முழுவதுமுள்ள மாவட்ட கருவூல அலுவலகத்தின் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தென்காசி மாவட்ட அமைப்பின் சார்பில் தென்காசி மாவட்ட கருவூல அலுவலகம் முன்பாக சுமார் 1000 ஆசிரியர்களை திரட்டி மாலை நேர ஆர்ப்பாட்டத்தை நடத்திட செயற்குழுவில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக் கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர்கள் ராஜன் ஜான், லட்சுமிகாந்தம்,மாவட்ட துணைச் செயலாளர் செல்வராஜ்,வட்டாரப் பொறுப்பாளர்கள் சேக் முகமது, ரபிக், ஐயப்பன், ரவிச்சந்திரன், பூரணராஜா, அருள்ராஜ், கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.