போடி நாயக்கனூரில் ஸ்ரீ கிருஷ்ணா சில்க்ஸ் ஜவுளி நிறுவனத்தை நகர் மன்ற தலைவர் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணா சில்க்ஸ் பட்டு மற்றும் ஜவுளி ரெடிமேட் நிறுவனத்தை நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் விழாவிற்கு தலைமை வைத்து குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்தார்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் லட்சுமணன் முன்னிலை வகித்து ஜவுளி நிறுவனத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் இந்த நிறுவனம் திறப்பு விழாவில் போடி நகர்மன்ற உறுப்பினரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான சங்கர் நகர செயலாளர் புருஷோத்தமன் மற்றும் திமுக நகர நிர்வாகிகள் காங்கிரஸ் நகர நிர்வாகிகள் நகர முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஜவுளி நிறுவனத்தின் உரிமையாளர் முரளிதரன் விழாவில் பங்கேற்ற அனைவரையும் கனிவுடன் உபசரித்தார்