தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா பாலக்கோடு அரிமா சங்கப் புதிய தலைவராக அரிமா C. கேசவராஜ் அவர்களுக்கு பன்னாட்டு அரிமா தலைவர்கள் முன்னிலையில் மாதம்பட்டி ஸ்ரீ மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது
இதில் புதிய நிர்வாக செயலாளர்கள் கிரிதர், சக்திவேல். பொருளாளர், முத்து, முதல் உதவி தலைவர் கோவிந்தசாமி, இரண்டாம் உதவி தலைவர் ராமநாதன், முன்னாள் தலைவர் ராஜா மணி முன்னாள் பொருளாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இதில் ஸ்ரீ மூகாம்பிகை கல்வி நிறுவனங்களின் தலைவர் அரிமா கோவிந்தராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள்-85 பேருக்குபுடவையும், பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10- மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது
இந்த விழாவில் திரளான பொதுமக்கள் இளைஞர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்