தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டார வள மைய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் தமிழக அரசு கொண்டு வந்த பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு திட்டம் செயல்படுத்தவுள்ளது
அதன் ஒரு பகுதியாக ஆலங்குளம் ஒன்றியத்தில உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு தொடக்க விழா ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணகுமாரி, தலைமை தாங்கினார்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜீவா ,ஆசிரியர் பயிற்றுநர் பவித்ரா வைதேகி. ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
இல்லம் தேடிக்கல்வி ஒருங்கினைப்பாளர்
முருகேசன்,ஆதார் தரகு உள்ளிட்டாளர் சே.கலைவாணி, ஆகியோர் ஆதார் பதிவுகளை மாணவ மாணவிகளுக்கு மேற் கொண்டனர்.
நிகழ்வில் எஸ் எம் சி தலைவர் ஜெயந்தி, துணை தலைவர் மகாலெட்சுமி,மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர் ராஜா செய்திருந்தார்.