விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் வட்டாரத்தில் ஒரே பயிரை தொடர்ந்து சாகுபடி செய்வதாலும் மண்ணில் உள்ள சத்துக்கள் அதிகம் உறிஞ்சும் பயிர்களை சாகுபடி செய்வதாலும் மண்ணில் வளம் குறைந்து கொண்டே வருகிறது.
இது தவிர அதிக அளவில் ரசாயன உரங்கள், களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் எண்ணிக்கை குறைந்து மண் வளம் குறைந்து கொண்டு வருகிறது.
இதனை தடுக்கும் வகையில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் விவசாயிகளை பசுந்தால் உரங்கலை பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் உள்ள கரிமச்சத்துக்களையும் பயிர் மகசூலையும் அதிகரிக்கும். இந்த நோக்கத்துடன் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 20 கிலோ பசுந்தால் உரப்பயிர்கள் 50% மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
எனவே பசுந்தாள் உரம் தேவைப்படும் விவசாயிகள் அவர்களின் கிராமத்திற்கு உரிய உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு 10(1) அடங்கல், ஆதார் கார்டு நகலினை மற்றும் அவர்களின் தொலைபேசி எண்களை கொடுத்து கொடுத்து பதிவு செய்யுமாறு ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் திருமலைச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.