புவனகிரி அருகே பு. கொளக்குடி கிராமத்தில் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது
புவனகிரி
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள பு. கொளக்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் ஸ்ரீ தருமராஜா ஆலயத்தில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
கடந்த 21.5.24 அன்று கொடியேற்றி காப்பு கட்டுதலுடன் தொடங்கிய இந்த திருவிழாவில் மகாபாரதத்தை மையப்படுத்தி நாள்தோறும் பல்வேறு விழாக்கள் பூஜைகள் நடைபெற்று
வந்தது விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது அலங்கரிக்கப்பட்ட பூங்கரகம் ஊரில் உள்ள முக்கிய வீதிகளில் உலா வந்து தீமிதி திருவிழா நடைபெற்றது .
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் தீமிதி திருவிழாவை கண்டுகளித்தனர்