தாராபுரம் செய்தியாளர்
பிரபு
கோடை விடுமுறை முடிந்து நேற்று 10.06.2024 மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் உற்சாகமுடன் பள்ளிக்கு திரும்பி உள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் 1822 பள்ளிகள் உள்ளது அனைத்து பள்ளிகளும் நேற்று முதல் செயல்பட துவங்கியுள்ளது.
தாராபுரம் சென்ட். அலோசியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மிகவும் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவ மாணவியர்களுக்கு தலைமை ஆசிரியர் சாந்தி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பூங்கொத்துக்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்பு கொடுத்தனர்.
மேலும் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் குழந்தைகளுக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் பயிற்சி கையேடுகள் உள்ளிட்டவை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவை நேற்று முதல் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் என பள்ளி கல்வி த்துறை மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதிய புத்தகங்கள் புதிய பேக்குகள், பென்சில் பேனா என புதிய பொருட்களோடு மாணவர்கள் உற்சாகமுடன் பள்ளிக்கு திரும்பி உள்ளனர்.கடந்த கல்வி ஆண்டில் பத்து, பதினொன்னு, பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மூன்று நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு அரிமா கிளப் செயலாளர் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் திரு.ரத்ன சபாபதி மகன் விவேகானந்தம் நினைவாக முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு தலா 5000 ரூபாயும்,இரண்டாம் மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு தலா ரூபாய் 4000 ரூபாயும்,மூன்றாம் மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு தலா 3000 வழங்கி சிறப்பித்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ரத்ன சபாபதி தான் பள்ளி மற்றும் கல்லூரி படித்து வந்த போது சிறந்த கூடைபந்து விளையாட்டு வீரராக இருந்து வந்தார்..
ஆகவே, இந்தப் பள்ளியில் கூடைபந்து விளையாட்டு போட்டியில் நல்ல வீராங்கனிகளாக பெற்று வந்தால் அவர்களுக்கு சிறந்த பரிசுத்தொகைகளும் மேலும் அவர்கள் மேற்க்கல்விகளுக்கு உதவி செய்வதாகும் கூறினார்..
இந்த நிகழ்ச்சியில் அலோசியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஆசிரிய-ஆசிரியைகள் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்..