அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் அவர்களின் தலைமையில், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மேலும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கட்டாய பணிகளில் ஈடுபடுத்துவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும். இதுபோன்று ஈடுபடுத்துவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு குழந்தைகளை கட்டாய தொழிலில் ஈடுபடுத்துவர் மீது 100,1098 அல்லது அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.சிவக்குமார் அவர்கள் (தலைமையிடம்)
அந்தோணி ஆரி அவர்கள் (இணைய குற்றப் பிரிவு), துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.