செய்தியாளர் இராதாகிருஷ்ணன்
சிவகாசி சப் கலெக்டராக பிரியா ரவிச்சந்திரன் பொறுப்பு ஏற்பு
சிவகாசி ஆர்.டி.ஓ.வாக பணியாற்றி வந்த விஸ்வநாதன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பணியாற்றி வந்த பிரியா ரவிச்சந்திரனை சிவகாசி சப்-கலெக்டராக தமிழக அரசு நியமித்தது. இந்த நிலையில் பிரியா ரவிச்சந்திரன் சிவகாசி சப்-கலெக்டராக நேற்று காலை பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவரிடம் விஸ்வநாதன் பொறுப்பு களை ஒப்படைத்தார்.
சப்-கலெக்டர் பிரியா ரவிச்சந்திரனுக்கு தாசில்தார்கள் ராம்தாஸ், வடிவேல் மற்றும் வருவாய்த்துறையினர் வாழ்த்து தெரிவித்தனர். சிவகாசிக்கு சப்- கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள பிரியா ரவிச்சந்திரன் தீயணைப்பு துறையில் இணை இயக்குனராக பணியாற்றியவர்.
கடந்த 2013-ல் இந்திய குடியரசு தலைவர் விருதும், தமிழ்நாடு முதல்-அமைச்சர் விரு தும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.