பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரி 24வது பட்டமளிப்பு விழா – 1848 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரியின் 24 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது1848 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர்.
கல்லூரி செயலாளர் புனிதா கணேசன் தொடக்கி வைத்தார். ஆண்டறிக்கையை கல்லூரி முதல்வர் குமார் வாசித்தார். சிறப்பு விருந்தினரை கல்லூரி செயலாளர்கள் புனிதா கணேசன் அறிமுகம் செய்து வைத்தார்.
தொடர்ந்து மாணவ, மாணவிகளு
க்கு திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் ம. செல்வம் பட்டங்கள் மற்றும் விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
பட்டமளிப்பு விழாவில் இளங்கலை மாணவ, மாணவிகள் 1469 பேரும், முதுகலை வகுப்பில் 379 மாணவ மாணவிகளும் பட்டம் பெற்றனர். மொத்தம் 1848 மாணவ, மாணவிகள் பட்டத்தை பெற்றனர். இதில் 162 மாணவ, மாணவிகள் பதக்கங்கள் பெற்றனர். இவர்களை சிறப்பு விருந்தினர் பாராட்டி பதக்கங்கள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.