தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையில் தேசிய அணைகள் பாதுகாப்பு குழுவினர் ஆய்வு
தேனி மாவட்டம் பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது சோத்துப்பாறை அணை இந்த அணையில் தேசிய அணைகள் பாதுகாப்பு தென் மண்டல தலைவர் அஜய்குமார் சின்ஹா தலைமையில் அணைகள் பாதுகாப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டார்கள்
உடன் தேசிய அணைகள் பாதுகாப்பு மண்டல இயக்குனர் ஸ்ரீதர் வசந்தகுமார் துணை இயக்குனர் கார்த்திகேயன் அமித் மிட்டல் பங்களா ஹேமந்த் நித்யா வசுந்தரா சர்மா ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்று அணையின் தரம் கட்டிடத்தின் உறுதித் தன்மை அணையில் நீர்த்தேக்கம் வெள்ளப்பெருக்கு காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அணைகள் பாதுகாப்பு ஆகியவைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர்
உடன் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு உதவி செய ற் பொறியாளர் சௌந்தரம் உதவி பொறியாளர் கமலக்கண்ணன் மற்றும் அணையின் பொதுப்பணித்துறையினர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்