வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
நாகம்மாள் கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஒன்றியம், கோம்பைப்பட்டி கிராமம் அய்யா பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ ஜடாமுனிஸ்வரர், நாகம்மாள் கோவில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக முதல் நாள் யாக பூஜை துவங்கி சிலை பிரதிஷ்டை செய்த மறு நொடியே நல்ல பாம்பு கருவறைக்குள் குடி புகுந்ததை கண்டு அனைவரும் ஆச்சரியத்தில் பக்தியில் மூழ்கினர்.
கும்பாபிஷேகத்தை காண நத்தம், கோபால்பட்டி, சாணார்பட்டி, அதிகாரிப்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.