செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வாணியர் சமுதாயம் நூற்றாண்டு விழா மற்றும் சமுதாய கூடம் 25 ஆம் ஆண்டு கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது.

வாணியர் தெருவிலுள்ள மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில், ஸ்ரீ சுந்தர மூர்த்தி வினாயகர் ஆலய கும்பாபிஷேகம் விரைவில் நடத்திடவும், சமுதாய பெண்களுக்கு நிர்வாகத்தில் பொறுப்பு அளிப்பது,மேலும் நலிவடைந்த மாணவர்களுக்கு நிதி உதவியளித்தல், வருமானம் குறைவாக உள்ள குடும்பத்தினருக்கு திருமணம் உதவி அளித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வந்தவாசி வாணிய சமுதாய தலைவர் புருஷசோத்தமன், ஆலோசகர்
து.சீனுவாசன், செயலாளர் பெ.தட்சிணாமூர்த்தி , பொருளாளர் ப.ரகுபதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.