தாராபுரம் செய்தியாளர் பிரபு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் சாலையில் பாலாஜி திருமண மண்டபத்தில் ஆதித்தமிழர் கட்சியின் சார்பாக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது இந்த செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் ஆர் சாமி தலைமையில் நடைபெற்றது..
இந்த செயற்குழு கூட்டத்தில் மாவட்ட தலைவர் மருதமுத்து முன்னிலை வகித்தார், மேலும் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் விஸ்வைகுமார், இக்கூட்டத்தில் திருப்பூரில் உள்ள பத்து ஒன்றியங்களில் நிர்வாகிகளை அமைப்பது கிளை அமைப்பதும் வலு அமைப்பது குறித்தும்,
24.06.2024 ஆம் தேதி மாநில தலைமை குழு அறிவித்துள்ள சென்னை அருந்ததியர் இட ஒதுக்கிட்டை 6% சதவிதமாக உயர்த்த கோரியும் மற்றும் பல்வேறு கோரிக்கை கொண்டு நடத்தப்படும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சென்னைக்கு நமது மாவட்டத்தின் சார்பாக பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்..
எதிர்வரும் 17.07.2024 ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெல்லான் நினைவு நாளில் கட்சியின் தலைவர் கலந்து கொள்வதால், திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக 10 வாகனத்துடன் கலந்து கொள்வேண்டும்,
தீர்மானங்கள் 1:திருப்பூர் மாவட்டம் இரண்டு மாவட்டங்களாக செயல்படும். கிழக்கு மாவட்ட செயலாளராக ஆறுச்சாமி,கிழக்கு மாவட்ட தலைவராக பொல்லான்,தெற்கு மாவட்ட செயலாளராக நடராஜன் தெற்கு மாவட்ட தலைவராக மருதமுத்து என மாவட்ட தலைமை குழு முடிவு செய்துள்ளது..
- திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சட்டமேதை புரட்சியாளர் அம்பேத்கரின் சிலை அமைக்க வேண்டுமென இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில்
மேற்கு மண்டல இளைஞர் அணி செயலாளர் பாண்டி உட்பட சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..