திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பல்வேறு இடங்களில் இன்று பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது-ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துக் கொண்டனர்.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைப்பெற்றது ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துக் கொண்டனர்

இதில் தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் கிளை-1 சார்பில் புதுத்தெரு ஏ.எஸ்.என்.திடலில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைப்பெற்றது. அப்போது மாவட்ட பேச்சாளர் அப்துர் ரஹ்மான் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார் இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் ஆண்கள் கலந்துக்கொண்டனர்

அதேபோல் அதேபோல் தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் கிளை-2 சார்பில் ஆசாத்நகர் நாடுமில்லில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைப்பெற்றது இதில் தவ்ஹீத்ஜமாத் மாவட்ட துணைத்தலைவர் தலைவர் அன்சாரி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெண்கள் உட்பட தவ்ஹீத்ஜமாத் அமைப்பினர் கலந்துகொண்டனர்

அதேபோல் தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் கிளை-3 சார்பில் தெற்குத்தெரு தவ்ஹீத்ஜமாத் பள்ளிவாசல் திடலில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைப்பெற்றது, மாவட்ட பேச்சாளர் முகமது மீரா லெப்பை கட்டி நானா தொழுகையை நடத்தினார் இதில் கிளை தலைவர் நெய்னா முகமது உட்பட ஏராளமான இஸ்லாமிய பெண்கள் ஆண்கள் கலந்துக்கொண்டனர்

அதேபோல் முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை தர்கா பள்ளிவாசலில் நடந்த பக்ரீத் தொழுகையில் தர்கா முதன்மை அறங்காவலர் பாக்கர் அலி சாஹீப் உட்பட நூற்றுக்கணக்கான வர்கள் பங்கேற்றனர்

இதேபோன்று முத்துப்பேட்டையில் பெரிய பள்ளிவாசல்களான குட்டியார் ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் குத்பா பள்ளிவாசலில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது இந்த தொழுகைகளில் 5ஆயிரத்திற்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்குபெற்றனர்

அதே போன்று தெற்குத் தெரு அரபு சாஹிப் பள்ளிவாசல் புதுத்தெரு ஜும்ஆ பள்ளிவாசல் எஸ்.பி.கே.எம் தோட்டத்தில் உள்ள மெக்கா பள்ளி வாசல் ஆசாத்நகர் ஜும்ஆ பள்ளிவாசல் ஆகியவைகளில் சிறப்பு தொழுகை மற்றும் சிறப்பு பயான் நடைபெற்றன

அதே போன்று பெண்களுக்காக தனி தொழுகையும் நடைபெற்றது. இந்த தொழுகைகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்குபெற்று தொழுகை முடிந்ததும் பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டனர்

இதே போன்று முத்துப்பேட்டை அடுத்த நாச்சிக்குளம் ஜும்ஆ பள்ளிவாசல் எடையூர் சங்கேந்தி ஜும்ஆ பள்ளிவாசலிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன

தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டி தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர் பலர் ஒன்றாக நின்று போட்டோ செல்பிகளுக்கு எடுத்துக்கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *