திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த உச்சிமலை குப்பம் தகுதியைச் சேர்ந்த நாராயணசாமி மகன் ஏழுமலை (50) என்பவர்
திருவண்ணாமலை சாலையிலிருந்து தனது வீட்டிற்கு செல்ல வலது புறம் திரும்பும் போது செங்கம் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத கார் இடித்துவிட்டு சென்றுள்ளது
அப்போது எதிரே செங்கத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்று விட்டது
இந்த விபத்தில் இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்தவர்களும் பலத்த காயம் ஏற்பட்டு உச்சமலைகுப்பம் ரெட்டி கொள்ளை பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் விபத்தில் உயிரிழந்தாக கூறப்படுகிறது
மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்தவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்
விபத்து குறித்து பாச்சல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு கொண்டு வருகின்றனர்