தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை ஒட்டி நாமக்கல்லில் ஏராளமான இஸ்லாமியர்கள் மசூதி ,தர்க்காக்களில் சிறப்பு தொழுகை நடத்தினர்.
பக்ரீத் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ஹஜ்பெருநாள் மற்றும் தியாகத் திருநாளாக கொண்டாடப்படுகிறது
இறைதூதர் நபிகள் பெருமகனாரின் தியாகத்தைப் போற்றும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது பக்ரீத் பண்டிகைக்கு ஆடு மாடு, ஒட்டகம், ஆகியவற்றை பலியிட்டு ஏழைகளுக்கு தானமாக வழங்கி இத்திருநாளை கொண்டாடி வருகின்றனர்.
இஸ்லாமிய சகோதரர்கள் ஊர்வலமாக சென்று சேலம் ரோட்டில் உள்ள ஈத்க்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடத்தினர் இதில் 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமிய சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்தி முடிந்த பிறகு அனைவரும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி கட்டி அனைத்து பக்ரீத் நல்வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டனர்.