எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் சூப்பர் மார்க்கெட் பூட்டை உடைத்து பணம் மற்றும் ஸ்கூல் பேக் கொள்ளை சி சி டிவி கேமரா பதிவுகளையும் எடுத்துச் சென்ற கொள்ளையர்கள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் கம்பன் நகர் 2வது தெரு பகுதியில் நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை தனியார் சூப்பர் மார்க்கெட் உள்ளது.
இதன் உரிமையாளர் கலைச்செல்வி மகன் ராஜேஷ் கண்ணன் நேற்று வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு கடையை திறக்க வந்தபோது கடையின் முன்பக்க ஷட்டர் பூட்டுகள் உடைக்கப்பட்டு நெம்பப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது உள்ளே இருந்த ரூபாய் 5000 ரொக்கம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான ஸ்கூல் பேக் மற்றும் லஞ்ச் பேக் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது.
இதன் மதிப்பு சுமார் 20000 என கூறப்படுகிறது. இது குறித்து சீர்காழி போலீசாருக்கு ராஜேஷ் கண்ணன் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அசோக் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.கடையை சுற்றிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் அதன் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்ய முயற்சித்த போது டி .வி .ஆர் பதிவு இயந்திரத்தை கொள்ளையர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
கடைய உடைத்து பொருட்கள் மற்றும் பணத்தை திருடி சென்ற நபர்கள் கண்காணிப்பு கேமரா பதிவு டி.வி.ஆரையும் திருடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது