கீழ வீராணம் முகைதீன் ஆண்டவர் ஜூம்மா பள்ளிவாசல் சார்பில் தியாகத் திருநாள் (ஈதுல் அல்ஹா) பெருநாள் தொழுகை;-
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே
கீழ வீராணத்தில் தியாகத் திருநாள் (ஈதுல் அல்ஹா)
பெருநாளை முன்னிட்டு முகைதீன் ஆண்டவர் ஜூம்மா பள்ளிவாசல் சார்பில் முஸ்லிம் தொடக்க உயர் நிலைப்பள்ளி வளாகத்தில் ஜமாத் தலைவர் மியாக்கண்னு தலைமையில் துணை தலைவர் உசேன், செயலாளர் இஸ்மாயில், துணை செயலாளர் கனி, ஆகியோர் முன்னிலையில் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது
இதில் பள்ளிவாசல் ஜமாத் இமாம் முஜா ஹிதீன்,
துணை இமாம் மணிர் அன்சாரி , ஆகியோர்
ஹஜ் பெருநாள் தொழுகை நடத்தினார்கள் ,
இப் பெருநாளின் ஒரு அங்கமாக குர்பானி பிராணியின் இறைச்சியை ஏழை எளிய மக்களுக்கும், சொந்த பந்தங்களும் வழங்கி இஸ்லாமியர்கள் மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று கூறினார்.
இந்த தொழுகையின் போது ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலர் ஷேக் முகமது, அமனூல்லா .ஜிந்தா மாதர், முத்தலிப்பு முஸ்தப்பா , உள்பட 200-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய ஆண்களும் , பெண்களும் ,
குழந்தைகளும், முதியோர்களும் கலந்து கொண்டனர்.
தொழுகை முடிந்த பின்பு ஒருவருக்
கொருவர் கட்டி தழுவி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.