ராஜபாளையம் குற்றப்புரிவு போலீசார் அதிரடி!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் ஆட்கள் இல்லாத வீடுகளில் இரவு நேரங்களில் புகுந்து முகமூடி அணிந்து கதவை உடைத்து உள்ளே நுழைந்து பணம் தங்க நகைகள் கொள்ளையடித்து செல்வது வாடிக்கையாக இருந்தது.
இது குறித்து விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரோஸ்கான் அப்துல்லா தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடும் பணியை முடுக்கி விட்டார்.
இதன்பேரில் ராஜபாளையம் டி எஸ் பி அழகேசன் தலைமையில் ராஜபாளையத்தில் தனிப்படை அமைக்கப்பட்டு அதில் இன்ஸ்பெக்டர்கள் முரளிதரன் பவுல்ஏசுதாசன் மறறும் குற்றப்பிரிவு எஸ்ஐ சக்திகுமார் குழுவினர் அடங்கிய போலீசார் உள்ளிட்ட தனிப்படையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் சுற்றி திரிந்த இருவரை பிடித்து போலீசார் விசாரித்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியது சந்தேகத்தை ஏற்படுத்தவே அவர்களை தெற்கு காவல் நிலையம் கொண்டு வந்து முறைப்படி விசாரித்த போது அவர்களிடம் கொள்ளையடிப்பதற்கு பயன்படுத்திய ஆடைகள், முகமூடி போன்றவை வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
பின்னர் அவர்களை முறைப்படி விசாரித்த போது அதில் ஒருவர் தேனிமாவட்டம் பெரியகுளம் அருகே தென்கரையை சேர்ந்த அருண்குமார் பிகாம் சிஏ படித்து கம்யூட்டர் சென்டர் வைத்து நடத்தி வருபவர் (23) மற்றும் சுரேஷ்குமார் (26) (வழக்குறைஞர்)
இவர்கள் இருவரும் ராஜபாளையம் தெற்கு ஆண்டாள்புரம் பகுதியில் உடல் எடை குறைப்பு நிலையம் வைத்து நடத்தியவரின் வீட்டில் கணவன், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை
கட்டி போட்டுவிட்டு 54 சவரன் நகை மற்றும் கொள்ளை அடித்துச் சென்ற வழக்கில் தொடர்புடையவர்கள் என தெரிய வந்தது இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து நகைகள் கைப்பற்றப்பட்டு நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
இதுகுறித்து காவல்துறையில் விசாரித்தபோது இந்த இரண்டுபேர் ஒரு குழுவாக செயல்பட்டு பல்வேறு மாவட்டங்களில் 60 க்கும் மேற்பட்ட இடங்களில் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளதாக சந்தேகப்படுகிறது ஆகவே அணைத்து கோணங்களிலும் எங்களின் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது
இரண்டு நாட்களில் சம்மந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து நகை மற்றும் ரோக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து சட்டத்தின் முன் ஒப்படைப்போம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது