ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது.
கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-25-ஆம் கல்வியாண்டு இளநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு வரவேற்பு விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
இதில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயணசுவாமி, விழாவிற்குத் தலைமை வகித்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் வரவேற்றுப் பேசினார்.
மேலும் இதில் கோவை மேற்கு மண்டலக் காவல்துறைத் தலைவர் கே.பவானீஸ்வரி விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு பேசினார்.
அதைத்தொடர்ந்து சென்னை சம்பா பப்ளிசிங் கம்பெனி இயக்குநர் மற்றும் ரோட்டரி கவர்னர் ஆர்.எஸ். மாருதி ,சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார்.
தொடர்ந்து எச்.ஆர். எவிடென் டிஜிட்டல் அண்டு கிளவுட் பிசினஸ் துணைத் தலைவர் மற்றும் உலகத் தலைவர் ஆர். ஸ்ரீ ராம் உரையாற்றினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு விழாவில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
புதிய மாணவர்கள் தங்கள் கல்லூரி அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டனர்.அதன் தொடர்ச்சியாக துறைத்தலைவர்கள் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர்.
கணிதத்துறைத் தலைவர் முனைவர் எம். உமா நன்றி கூறினார்.இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்கள்,பேராசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.