பெரம்பலூர் மாவட்டம்
குன்னம் வட்டம் மருவத்தூர் கிராமத்தில் கழிவுநீர் தேங்கியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்ததின் அடிப்படையில், உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு சிமெண்ட்குழாய்கள் அமைத்து கழிவுநீரை முறையாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பேரளி ஊராட்சிக்குட்பட்ட மருவத்தூர் கிராமத்தில் தெற்கு தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்பதாகவும் இதனால் கொசு தொல் லைகள் அதிகமாக இருப்பதாலும் அந்த கழிவுநீரில் நாய்கள் பன்றிகள் தங்குவதால் நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்ததின் அடிப்படையில், உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து அதன் அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.
அதனடிப்படையில், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.செல்வகுமார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், ஜேசிபி இயந்திரம் மூலம் அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு, நான்கு புதிய சிமெண்ட்குழாய்கள் அமைக்கப்பட்டு,தேங்கி நின்ற கழிவுநீரை முறையாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது கழிவுநீர் தேங்காமல் முறையாக வெளியேற்றப்பட்டு வருகின்றது, கோரிக்கை வைத்த சில மணி நேரங்களிலேயே உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.