தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இளம் தலைவர் ராகுல் காந்தியின் 54-வது பிறந்தநாள் விழா ஆலங்குளம் நகர காங்கிரஸ் சார்பில் பெருந்தலைவர் காமராஜர்சிலை அருகே நடைபெற்றது.
ஆலங்குளம் நகர காங்கிரஸ் தலைவர் வில்லியம் தாமஸ் தலைமை தாங்கினார் வட்டார காங்கிரஸ் தலைவர் ரூபன் தேவதாஸ் முன்னிலை வகித்தார்.
நெல்லை மக்களவை தொகுதியில் எம்.பி. ராபர்ட் புரூஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலங்குளத்தில் உள்ள பெருந் தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில கலை இலக்கிய அணி ஆலடி சங்கரய்யா, கலை இலக்கிய அணி விமல் லிவிங்ஸ்டன். இயேசுராஜா, தமிழ்மணி, வழக்கறிஞர் கருப்பசித்தன், மற்றும் மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.