ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் யோகா பயிற்சி மற்றும் யோகாசனம் செய்து சாதனை படைத்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து யோகாசன பயிற்சி நடைபெற்றது.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் ஸ்ரீவில்லித்தூரில் உள்ள முதன்மை மாவட்ட நீதிபதி உத்தரவின் பேரில் ராஜபாளையம் மாவட்ட உரிமையியல் நீதிபதி பாலமுருகன் தலைமையில் நீதிபதி பிரீத்தி பிரசன்னா முன்னிலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் யோகா பயிற்சி நடத்தப்பட்டது.
யோகா பயிற்சியாளர்கள் ஷோபனா, கல்யாணி ஆகியோர் யோகா செய்வதின் பலன், மற்றும் அதனால் ஏற்படும் உடல் ஆரோக்கியம் புத்துணர்ச்சி குறித்து பயிற்சி அளித்து உரையாற்றினார்கள். ஏராளமான நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இதில் பங்கேற்றனர்.