மதுராந்தகம் செய்தியாளர் ராஜசேகர்.
செங்கல்பட்டு தெற்கு மாவட்டம்
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மருத்துவர் அன்புமணி ஆகியோரின் ஆலோசனை படி விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து பாமக சிறப்பு ஆலோசனை கூட்டம் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் தே.சாந்தமூர்த்தி தலைமையில் மேல்மருவத்தூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நடைபெற இருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாமக வேட்பாளரை
ஆதரித்து கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு பெருவாரியான வாக்கு பெற்று தருவதற்கான பணிகளை
மேற்கொள்ள வேண்டும், என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்வில் ஆசிரியர் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் இரா.பரந்தாமன்,மாநில செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் வா.கோபாலகண்ணன்,மாவட்ட துணைத் தலைவர் சிவகுமார்,உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர்
திலகராஜ்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் அர்ஜுனன், நகர அமைப்பு
செயலாளர் அ.கண்ணன்,மாவட்ட துணை செயலாளர் நாகரத்தினம்,மாவட்ட துணை செயலாளர் பானுமதி,மகளிர் அணி மாவட்ட செயலாளர் ஜெயலட்சுமி, மற்றும் வேல்முருகன், ராஜேஷ், பசுமைத்தாயாக மாவட்ட செயலாளர் உதயகுமார்,அன்புமணி தம்பிகள் படை மாவட்ட செயலாளர் கோதண்டம்,ஒன்றிய செயலாளர்கள் கோ.முருகன், செந்தில்குமார் கா.சந்தோஷ் ராஜா முத்துக்குமரன், திருவேங்கடம், காளிதாஸ், கன்னியப்பன், குகன்,ஆதிகேசவன், ஹரிராஜ்,
இடைகழிநாடு பேரூர் செயலாளர் விஜயகுமார், மற்றும் பாமகநிர்வாகிகள் எண்டத்தூர் வேலு,
ஒன்றிய தலைவர்கள் முத்துக்குமார், அணில் என்கிற ராமமூர்த்தி, பலாயுதம், கோபால்சாமி, உள்ளிட்ட ஒன்றிய தலைவர்கள் பேரூர் நகர கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.