கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றது .இந்த நிலையில் சிவசேனா கட்சி மாநிலத் துணைத் தலைவர் எஸ் பூக்கடை எஸ். ஆனந்த் செய்தியாளரிடம் பேசுகையில்

மக்கள் ஜனநாயகத்திற்கு விரோதமாக அரங்கேறிய சம்பவம் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் அருந்தி 58.க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் என்பது. தமிழகத்தில் பெரும் பேர் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.!
இந்த நிலையில் தமிழக அரசு.
போதை பொருள் விற்பனையாளர் மீதும் மற்றும் போதை பொருள் கடத்தல்காரர்கள். போதை பொருள் பதுக்கி வைப்பவர்கள் போதை பொருளை புழக்கத்தில் விடுபவர்கள் மீது கடுமையான முறையில் தமிழக அரசு மற்றும் காவல்துறை உடனடியாக இரும்பு கரம் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும். தமிழக அரசு மெத்தனப் போக்கில் ஈடுபடாமல் விழிப்புணர்வோடு மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்றும்.
சிவ சேனா கட்சி சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.!

இது மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போதை பொருளான கஞ்சா, குட்கா, புழக்கங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது இதற்கு தமிழக அரசும் காவல்துறையும் போதை பொருள் விற்பனையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும்.

என்றும் போதைப் பொருட்களை ஒழிப்பதற்கு தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட வேண்டும் என்றும் காவல்துறை அதை கடைபிடிக்க வேண்டும் என்றும். இனி வரும் காலங்களில் போதைப் பொருள் விற்பனைக்கு சிறிதும் தமிழக அரசு இடமளிக்கக் கூடாது என்று.! இதுவரை பாதிப்பு அடைந்தோருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும். தாய் தந்தையரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு உரிய கல்வி வசதி பொருளாதார வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும்.
அதேபோல், தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *