தென்காசி,
தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்ட சர்வதேச யோகா தின நிகழ்ச்சிக்கு பள்ளி சட்ட ஆலோசகரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை தலைமை தாங்கி யோகாசனங்கள் குறித்து சிறப்புரையாற்றினார்.
பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி.மிராக்ளின் பால் சுசி, பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரவிந்த் யோகாசன இயக்குநர் மருது சுபாஷ்; யோகாசன பயிற்சி அளித்து யோகாவின் பயன்கள் பற்றி விளக்கினார். மாணவ, மாணவிகள் ஒரு மணி நேரத்தில் 100 யோகாசனங்களை செய்து சாதனை படைத்தனர்.