தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் கே. மாரியப்பன். தலைமை தாங்கினார்.

சிபிஎம் மாவட்ட குழ உறுப்பினர் மணிகண்டன் துவக்க உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து சிபிஎம் மாவட்ட குழ உறுப்பினர்கள் பேராசிரியை சங்கரி, என். லெனின் குமார்,டி.வன்னிய பெருமாள், வட்டார குழ உறுப்பினர்கள் டி அய்யப்பன். ஆர். பாட்டபிராமன், எஸ். முருகையா மற்றும் பட்டமுத்து, செல்லத்துரை, ஆறுமுகம், வாள்ளிநாயகம் ஆகியோர் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பேசினார்கள்.

அதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் எம்.அயுப்கான் போராட்டத்தின் நோக்கம் பற்றியும், நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசை கண்டித்தும், தமிழகத்தில் உடனடியாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும். நிறைவுரை யாற்றினார். முடிவில்
டி.ஐயப்பன் அனைவருக்கும் நன்றி கூறினார்

செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு செங்கோட்டை தாலுகா சிபிஎம் செயலாளர் பி.வேலுமயில் தலைமை தாங்கினார்.

இந்த போராட்டத்தில் சிபிஎம் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள் பால்ராஜ், ஆயிஷா பேகம் மற்றும் தாலுகா குழு உறுப்பினர்கள் முருகேசன், ராஜகோபால் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள்.

இந்த போராட்டத்தில் தாலுகா குழு உறுப்பினர்கள் பழனி, முகமது காசிம், சங்கர், மல்லிகா மற்றும் கிளை செயலாளர்கள் அப்துல்ரகுமான், சின்னசாமி முத்துசாமி, சண்முகவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் செங்கோட்டை தாலுகா சிபிஎம் செயலாளர் பி.வேலுமயில் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *