மதுரை அஞ்சல் நகர் இடைவிடா சகாய அன்னை ஆலயத்தின் 50 ஆம் ஆண்டு பொன்விழா கொடியேற்றத்துடன் துவங்கியது
ஆலய வளாகத்தில் இருந்துகொடி பவனியாக எடுத்துவரப்பட்டு ஆலய வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் இரட்சகர் சபையினுடைய பெங்களூர் மறை மாநில தலைவர் அருட்தந்தை ஜான் மேத்யூ கொடியேற்றி சிறப்புத் திருப்பலி நிறைவேற்றி விழாவை துவங்கி வைத்தார்
இதனைத் தொடர்ந்து வரும் 30-ம் தேதி வரை தினமும் மாலை 5:45 மணிக்கு ஜெபமாலை வழிபாடும் தொடர்ந்து திருவிழா திருப்பலியும் பல்வேறு அருட்தந்தையர்களால் நிறைவேற்றப்
படுகிறது. முக்கிய நிகழ்வுகளாக 23 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை குழந்தைகளுக்கு புது நன்மை வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது
இதில் சதங்கை கலைத்தொடர்பு மைய இயக்குனர் அருட்தந்தை அலெக்ஸ் ஞானராஜ் திருப்பலி நிறைவேற்றி குழந்தைகளுக்கு புது நன்மை வழங்குகிறார் 26 ம் தேதி புதன்கிழமை மாலை மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்பு சாமி சிறப்பு திருப்பலி நிறைவேற்றி குழந்தைகளுக்கு உறுதி பூசுதல் வழங்கும் நிகழ்வை நிறைவேற்றுகிறார்.
தொடர்ந்து29ம் தேதி சனிக்கிழமை திருவிழா திருப்பலியை சிவகங்கை மறை மாவட்ட ஆயர் லூர்து ஆனந்தம் நிறைவேற்றி தேர் பவனியை துவங்கி வைக்கிறார்.
பின்னர் கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை அருள் சேகர் தலைமையில் பங்கு இறை மக்கள் அன்பிய பொறுப்பாளர்கள் மற்றும் பக்த சபையினர் செய்து வருகின்றனர்.