மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் மிட் டவுன் ரோட்டரி கிளப் ஏற்பாட்டில் விமானத்தில் சென்னை பயணம் –
மதுரை மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த படிப்பில் சிறந்த மாணவ , மாணவிகளை விமானத்தில் சென்னைக்கு அழைத்துச் செல்ல “வானில் சிறகடிப்போம்” என்ற பெயரில் திட்டமிடப் பட்டிருந்தது. அதன்படி மதுரை மிட் டவுன் ரோட்டரி கிளப் சார்பில் இன்று காலை விமானம் மூலம் சென்னைக்கு மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகள் 10 பேர் அழைத்துச் செல்லப்பட்டனர். முன்னதாக விமானநிலையத்தில் மாணவர்களுக்கு மேயர் இந்திராணி , மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வழி அனுப்பி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி கல்வி அதிகாரிகள், மண்டல தலைவர் சுவிதா விமல், மாநகராட்சி கல்வி குழு தலைவர் ரவிச்சந்திரன், மதுரை மிட் டவுன் ரோட்டரி கிளப் தலைவர் சிவசங்கர், செயலாளர் லெனின் குமார், பொருளாளர் சந்திரசேகரன், முன்னாள் தலைவர் மதன், ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் முருகானந்த பாண்டியன், உதவி ஆளுநர் கௌசல்யா மற்றும் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாணவர்களை வழி அனுப்பி வைத்தனர்.
இவர்கள் சென்னை சென்று இன்று காலை 11 முதல் 12 மணி வரை சட்டசபை நிகழ்ச்சிகளை பார்வை யிடுகின்றனர்.
மதிய உணவுக்கு பின் மெரினா பீச் மற்றும் முக்கிய இடங்களை பார்வையிட்டு மீண்டும் இன்று இரவு பஸ் மூலம் மதுரை திரும்புகின்றனர்.