கும்பகோணம்-இந்து மக்கள் கட்சி சார்பில் நீதி அரசர் சந்துருவின் பள்ளி, கல்லூரிகளில் இந்து சமய விரோத போக்கோடு தமிழக முதல்வரிடம் அளித்துள்ள தனிநபர் விசாரணை கமிஷனை நடைமுறைப்படுத்த கூடாது என கும்பகோணம்
மாவட்ட கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனு
அளித்தனர்.
இந்து மக்கள் கட்சி இளைஞர் அணி மாவட்ட செயலாளர் எம்.ரவீந்திரன் தலைமையில்
மாநில பொதுச் செயலாளர் டி.குருமூர்த்தி
இந்திய ஜனநாயக கட்சி நகர செயலாளர் சேதுராமன் மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர்
கணேஷ் குமார்,இளைஞர் அணி மாநகர அமைப்பாளர் நைனா இளைஞர் அணி மாநகரச் செயலாளர் டெல்டா மணிகண்டன், ஆலய பாதுகாப்பு பிரிவு மாவட்ட அமைப்பாளர் வீரா செந்தில், நிர்வாகிகள் கார்த்திக், நேத்ரா, வினோத், மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து மன அளித்தனர்
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பள்ளி,கல்லூரிகளில் சாதி அடையாளங்களை களைவதாக கூறி தமிழக அரசு நீதிபதி சந்துரு தலைமையில் தனி நபர் விசாரணை குழு அமைக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அறிக்கையை அளித்துள்ளது. தனி நபர் விசாரணை குழு அளித்துள்ள அறிக்கை முழுவதும் இந்து சமய நம்பிக்கையை சீர்குலைக்கும் வண்ணம் உள்ளது.
இந்து சமய நம்பிக்கை அடையாளமான காப்பு, கயிறு கட்டுதல், திலகம் இடுதல், பூ வைத்தல் போன்றவைகளை தடை செய்திட வேண்டும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சாதிக்கென்று தனிபட்ட அடையாளப்படுத்தக்கூடிய கயிறுகள் இல்லை. ஆனால் கடவுள் மீது நம்பிக்கை கொண்ட இந்து சமூகத்தை சார்ந்தவர்கள் ஆலயங்களில் வழிபாடு நடத்தி சமய சின்னமான கயிறுகள் கட்டுவது வழக்கம்.
இந்துக்கள் திருநீர், குங்குமம், சந்தனம் இட்டுக்கொள்வது சமய நம்பிக்கை சார்ந்தது. தற்பொழுதும் நடைமுறையில் உள்ளது. பெண்கள் பூ வைத்துக்கொள்வது என்பது வாழ்வியல் நடைமுறை திருநீர், குங்குமம், சந்தனம், பூ திலகம் இடுவது போன்றவை அறிவியல் பூர்வமாக பல்வேறு நன்மைகளை அளிக்கக்கூடியது.
நீதியரசர் சந்துரு அவர்களின் அறிக்கை மறைமுகமாக மதமாற்றத்தை ஊக்குவிப்பதாக உள்ளது. மாற்று மதத்தைச் சார்ந்தவர்கள் தங்களின் மத அடையாளமான சிலுவை, ஹிஜாப் போன்றவைகள் பற்றி அரசுக்கு அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.ஆனால் இந்து சமுதாயத்தில் அடையாளங்களை மட்டும் நீக்க வலியுறுத்துவது மிகவும் கண்டித்தக்கது.
பெரும்பான்மை, சிறுபான்மை என சாதிய ரீதியாக பிரிக்கின்ற வேலையை தனி நபர் விசாரணை குழு செய்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை பாடநூல் கழகம் சார்பில் நடப்பாண்டு வெளியட்டுள்ள மூன்றாம் வகுப்பு தமிழ் பாடத்தில் அனைவரும் கைகோர்த்து சம ரீதியாக நிற்பது போன்ற புகைப்படத்தில் இஸ்லாமிய மத அடிப்படை அடையாள சின்னங்கள் மட்டும் இடம் பெற்றுள்ளது. மீதமுள்ள குழந்தைகளின் சமைய அடையாள சின்னங்கள் நீக்கப்பட்டுள்ளது மிகவும் கண்டித்தக்கது.
எனவே மேற்கண்ட பாடத்திட்டத்தில் இருந்து அந்த பகுதியை நீக்கிட வேண்டும். மதரீதியாக,
ஜாதி ரீதியாக பிளவுப்படுத்தக்கூடிய நீதிபதி சந்துரு விசாரணைக்குழு அளித்துள்ள அறிக்கையை தமிழக அரசும் பள்ளி கல்வித்துறையும் ஏற்கக்கூடாது எனவும் நடைமுறைப்படுத்துவதை தடை செய்திட வேண்டுமென இந்து மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.